கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அசத்தலான படங்களை தர நடிகர் விஜய் சேதுபதி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘ இந்த ஆண்டின் அவரது முதல் ரிலீசாக அமையவுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ‘7C’s Entertainment Private Limited’ நிறுவனமும் ‘Amme Narayana Entertainment’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]