‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 18ஆம் ஆளுமையாக கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார்.தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மரபின் மைந்தன் முத்தையா முன்னிலை வகித்தார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது : ஓர் இனத்தின் வரலாறும் பண்பாடும்தான் அதன் பெருமை. […]