தமிழில் ஏராளமான திரைப்படங்கள் வருகின்றன. அத்தி பூத்தாற்போல, குறிஞ்சிப்பூ போல வித்தியாச முயற்சி என்பது எப்போதாவது மட்டுமே நிகழ்கிறது. அப்படி ஒரு மாறுபட்ட முயற்சியாக ‘மற்றொருவன்’ என்கிற பெயரில் ஒரே ஒரு நடிகர் நடித்து ஒரு படம் உருவாகியிருக்கிறது. கதைப்படி ஒரே ஒரு பாத்திரம் தான் திரையில் தெரியும். அப்படிப்பட்ட பாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்திருக்கிறார். மரியா பிலிம் கம்பெனி சார்பில் வேல்முருகன், கே. எம். செபஸ்டின், திருப்பூர் மோகன் தயாரித்துள்ளனர். புதுமுக இயக்குநர் மஜோ மேத்யூ இயக்கியுள்ளார். […]