போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது” என்ற அளவில் யோகிபாபுவின் கொடி கோடம்பாக்கத்தில் பட்டொளி வீசிப்பறக்கிறது. யோகிபாபுவை காமெடியில் புகுத்தி பல படங்கள் வெற்றிபெற்று வரும் நிலையில், யோகிபாபுவை முழுக்க முழுக்க கதையில் புகுத்தி படத்தையே வேறோர் காமெடி தளத்தில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன். R.G.மீடியா சார்பாக D.ராபின்சன் தயாரித்துள்ள “கடலை போட ஒரு பொண்ணு வேணும்” படத்தை வேகமாக எடுத்துள்ள இயக்குநர் ஆனந்த்ராஜன் படத்தைப் பற்றிக் கூறும்போது, “யோகிபாபுவின் இன்னொரு […]