மீத்தேன் திட்டத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் வேதனைகளைச் சொல்லும் விதமாகவும் ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணனுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா நடத்தி கௌரவித்திருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பாராட்டு விழாவை நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் இரா.சரவணனை ‘மண்ணின் இயக்குநர்’ எனக் கௌரவித்தது. ஏராளமான விவசாயிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்துகொண்ட இந்த விழாவில், இயக்குநரின் சொந்த ஊரான புனல்வாசல் கிராமத்தினர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். விழாவில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் […]