உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். மற்ற கட்சியில் உள்ள தொண்டர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து வருகின்றனர். நேற்றும் கூட புதுவையை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் பிரதீப் குமார் தலைமையிலும் பூவை ஜெகதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் அன்பையும் நேர்மையும் தேடி […]