தமிழ் திரையுலகின் முதகெலும்பாய் செயல்பட்டு வந்த பல ஸ்டுடியோக்கள் கால போக்கில் மெதுவாக மறைந்து விட்டாலும், தற்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில் நிறுவப்பட்டிருக்கும் பிரமாண்டமான G STUDIO, தமிழ் திரையுலகிற்கு புத்துயிர் அளித்திருக்கின்றது. இந்த ஸ்டுடியோவை நேற்று பல திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் கமல் ஹாசன் திறந்து வைத்தார். உலக தரத்தில் மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ, சென்னை மாநகரத்திற்கு புதியதொரு அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம். இசைஞானி இளையராஜா […]