போகன், நெருப்புடா, மற்றும் நைட் ஷோ ஆகிய படங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த வருண், தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவாக அவதாரம் எடுக்கவிருக்கும் வருண், சினிமாவுக்கு தேவையான, நாயகனாக புகழ் பெற அவசியமான அத்தனை கலைகளையும் நன்கு கற்றிருக்கிறார். ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் இணை இயக்குனர் நட்டு தேவ் இயக்கும் ‘பப்பி’ படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டேவுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் […]