நளனும் நந்தினியும், சுட்டக்கதை படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரோடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. இந்தப் படத்தில் விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் “நெருப்புடா” அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த். “நட்புனா என்னன்னு தெரியுமா” திரைப்படம் மார்ச் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. […]