”கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளையதலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம் செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும். தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்” என்று சிங்கப்பூரில் எழுத்தாளர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்ணதாசன் விழாவில் கவிஞர் எழுத்தாளர் கபிலன்வைரமுத்து குறிப்பிட்டார். “கண்ணதாசன் ஒரு தனி மனிதர் அல்ல. அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு தமிழ்த் தலைமுறை தன்னைத் தெரிந்துகொள்கிறது” என்றும் தன் உரையை நிறைவு செய்தார். […]