தமிழ்த் திரையுலகின் முதல் முழுமையான டிஜிட்டல் படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி, இயக்கி வெற்றி பெற்ற இயக்குநரான ஆதிராஜன், தற்போது ஒரு கபடி வீரனின் காதல் கதையை கெளரவக் கொலை சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் ‘அருவா சண்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கபடி வீரனாக ராஜா அறிமுகமாகிறார். வில்லனாக ‘ஆடுகளம்’ நரேன் நடிக்கிறார். மற்றும் சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை […]