ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன். ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜூன் 16-ம் தேதி முதல் தென்காசியில் தொடங்கவுள்ளது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனிடையே ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஏற்கெனவே […]