சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் […]