உலகம் இன்று தொழில்நுட்பத்தில் சுருங்கி உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஆனால் மனிதர்கள் தனித்தனி தீவுகளாகக் கிடக்கிறார்கள். சக மனிதர்களிடம் அன்பு காட்டும் குணம் குறைந்து விட்டது. சகமனிதனின் அன்பையும் உரிமையையும் பாராட்டும் ஒரு கதைதான் ‘புத்தன் இயேசு காந்தி’ படம். இப்படத்தை இயக்கியுள்ளவர் வே. வெற்றி வேல் சந்திரசேகர். இவர் பத்திரிகை, டிவி, சினிமா என்று பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். ‘பாலை’ ,’பகல்’ படங்களில் செந்தமிழன், எழில்பாரதி ஆகியோரிடம் சினிமா பயின்றவர். சில குறும் படங்களையும் இயக்கியவர். […]