உடக நண்பர்களுக்கு வணக்கம்! எனது படம் ‘மனுசனா நீ’ கடந்த வாரம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன். ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வலையேற்றி விட்டனர். ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர்மேல் […]