தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. ‘பாகுபலி’ படத்தில் ‘கட்டப்பா’ கதாபாத்திரத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர் சத்யராஜ். அவர் தற்பொழுது ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். இந்த படத்தை ‘கள்ளப்படம்’ புகழ் வேல் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் வேல் பேசுகையில் , ”பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை […]