கடந்த வெள்ளியன்று ‘6 அத்தியாயம்’ படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பினால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்று ‘திரைப்பட இலக்கியச் சங்கமம்’ சார்பில் டிஸ்கவரி புக் பேலஸில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது இந்தப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். முன்னதாக நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலியும் செலுத்தினர். ஆறு இயக்குனர்கள், ஆறு […]