கல்யாணம் பற்றிய கலகலப்பான கதை ‘ஒருநாள் கூத்து’ தினேஷ்-மியா ஜார்ஜ் நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படம்! திருமணம் என்றதும் இனம்புரியாத மகிழ்ச்சி எழுவதும் காரணம் தெரியாத கனவு மலர்வதுமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வித பதற்றமும் மன அழுத்தமும் வந்து ஆணோ பெண்ணோ இருவரையுமே சூழ்ந்து கொள்கின்றன. எப்படியாவது திருமணம் நடக்க வேண்டும் என்கிற உந்துதலும் நெருக்குதலும் பலருக்கும் நெருக்கடி தருகின்றன. சற்றுத் தள்ளி நின்று பார்த்தால் ,திருமணம் என்பதே […]