வளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா மகிழ்ந்து கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் கூறியிருப்பதாவது : “நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பல்வேறு பட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக, கனவாக இருந்து கொண்டிருந்தது. […]