‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப் பின் ஆர்.கே. சுரேஷ் தன் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் பிரமாண்டப் படமாக உருவாகவுள்ள ‘புலிப்பாண்டி’ படத்தில் நடிக்கவுள்ளார். பிற நடிகர்கள் படக் குழு பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். அவரிடம் அவரைப் பற்றி வந்துள்ள செய்தி பற்றிக் கேட்டோம். தன்னைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார் பற்றித்தானே என்று பேச ஆரம்பித்தார். “கோடை மழை என்ற படத்தை கதிரவன் இயக்கியிருந்தார். முதலில் வெளியான போது கவனிக்கப்படவில்லை. மறுபடியும் வெளியிட வேண்டும் […]