மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமை சங்கம் சார்பாக 30.06.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை தி.நகர் வாணி மஹாலில் “இசைஞானி இளையராஜா” அவர்கள் அழைப்பின் பேரில் மெல்லிசைத்துறை பற்றிய ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இப்பெருமைக்குரிய கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மெல்லிசைக்குழு நடத்தும் தலைவர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் இசைஞானி இளையரஜா பேசியது, “எனக்கு முன்னால் நிர்வாகிகள் பேசியதைக் கேட்டிருப்பீர்கள். பல்வேறு கருத்துக்கள் உங்கள் மனதில் இருக்கும். […]