“பவர்ஸ்டாருக்கென்று தனி பாடி லாங்குவேஜே இருக்கு” ; சிவா கலாட்டா..! ஹிட் காம்பினேஷன் என சொல்லப்படுகிற சிவாவும் பவர்ஸ்டார் சீனிவாசனும் இணைந்து நடித்து, மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.. ஜீவாவை வைத்து கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பெங்களூரை சேர்ந்த நைனா சர்வார் என்பவர் நடித்துள்ளார்.. இவர்களுடன் சென்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா என பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் […]