‘நெஞ்சில் துணிவிருந்தால்’ சுசீந்திரன் சார் படத்தில் ‘பாண்டிய நாட்டிற்கு பிறகு எனக்கு நடிக்க கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. சந்திப், சூரி அண்ணன், ஹரிஷ் உத்தமன் போன்ற மொத்த குழுவுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த சந்தோஷம். இது சமூக அக்கறை மற்றும் இரண்டு நண்பர்களுக்கு இடையில் ஏற்படும் நட்பை மையமாக கொண்ட படம். ‘பாண்டிய நாடு’ எனக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த படம். அதுபோல் அனைவருக்கும் இந்த படத்தில் அழுத்தமான உணர்சிப்புர்வமான கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. […]