இந்த 2017-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்தில் இளம் இயக்குநர்களுக்கான வருடம் என்றுதான் சொல்ல வேண்டும். ‘துருவங்கள் 16’, ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘ரங்கூன்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘மரகத நாணயம்’ என தொடர்ந்து புதிய இயக்குநர்களின் படங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது புதிதாக இணையவுள்ளது ‘கட்டம்’ திரைப்படம். இந்தப் படத்தை I create wonder என்கிற புதிய நிறுவனம் தயாரித்துள்ளது. புதுமுகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் […]