அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை தயாரித்த ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் அருண் விஜய் நடிக்கின்றார். முன் தினம் பார்த்தேனே, தடையறத்தாக்க, மீகாமன் போன்ற தொடர் வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகின்றார். என்னை அறிந்தால், குற்றம் 23 போன்ற படங்களில் தனது தனித்தன்மையான […]