மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதைப் பாராட்டி ‘கத்துக்குட்டி’ படக்குழு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், படத்தின் இயக்குநர் இரா.சரவணன் கூறியிருப்பதாவது: தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைத் தரிசாக்கத் துடித்த மீத்தேன் திட்டத்தின் அபாயத்தையும், கொடூரத்தையும் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது எங்களுடைய ‘கத்துக்குட்டி’ படம். 691 சதுர கி.மீ. விவசாய நிலத்தைக் காவு வாங்கி, வாழவாதாரத்தையே நிர்மூலமாக்கக்கூடிய மீத்தேன் திட்டத்தை ஆஸ்திரேலியா, அயர்லாந்து, கனடா, போலந்து உள்ளிட்ட உலகத்தின் பன்னாடுகளும் […]