அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாஸம் வர்த்தக வட்டாரங்களில் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. 2019ஆம் ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றான, சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரு மிகப்பெரிய வணிக சந்தையை கொண்டுள்ளது. தற்போது ரஷ்யாவில் மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளில் திரைப்படத்தை வெளியிடும் செவன்த் சென்ஸ் சினிமேடிக்ஸின் பிரசாந்த் அவர்கள் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “திரு.அஜித்குமார் அவர்களின் […]