டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவானது, வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறுகிறது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர். எம் வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை […]