தமிழில் பல்வேறு திரைப்படங்களில் பாட்டியாக நடித்து புகழ் பெற்றவர் திருமதி ரங்கம்மாள் பாட்டி. இவர் தமிழ் திரைப்படங்களில் அவ்வபோது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் வரும் 500ரூபாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு ரங்கம்மாள் பாட்டி மெரீனா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக செய்தி ஒன்று பரவி வந்தது. இந்த தகவல் அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள். அவரை பற்றி விசாரித்து மெரினா கடற்கரைக்கு பாட்டியை தேடி சென்றனர். […]