பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது… ” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி. தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், […]