ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், உதய்ராஜ், அவந்திகா நடிப்பில் ஆர்.முனுசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ரீல்’. சந்தோஷ் சந்திரன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. துபாயில் பார் டான்சராக இருக்கும் ஒருவர் சொன்ன சம்பவங்களை வைத்து இந்த கதையை எழுதினோம். […]