சாமி 2க்கு இசையமைக்கும் தேவி ஸ்ரீபிரசாத். புலி , இருமுகன் ஆகிய படங்களை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் சாமி 2 படத்தினை தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடிக்க நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். ஜுலை மாதத்தில் இதன் முதற்கட்ட படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் ஏற்கனவே ஹரி இயக்கிய சிங்கம் படத்தின் […]