தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குனர் ரவிமரியா… ரவிமரியாவை பொறுத்தவரை பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலுமே நம்மை சிரிக்க வைத்துவிடுவார். அவரிடம் பகிரி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினோம். ‘’பகிரி படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த […]