2014-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகளுக்கான போட்டியில் ‘காவியத்தலைவன்’, ‘மெட்ராஸ்’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 4 படங்களே அதிகமான பிரிவுகளில் பிரதானமாக மோதுகின்றன. ‘காவியத்தலைவன்’ திரைப்படம் மிக அதிகமாக சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், பாடகி என அனைத்துப் பிரிவுகளிலுமே போட்டியிடுகிறது. ‘மெட்ராஸ்’ திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடகர், […]