பேரன்பு திரைப்படம் 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சி (Asian Premiere) நேற்று (ஜூன் 16-ம் தேதி) திரையிடப்பட்டது. ஷாங்காய் ஹாங்கௌ ஜின்யி சினிமா அரங்கில் நடைபெற்ற முதல் காட்சி சீன பார்வையாளர்களால் அரங்கு நிறைந்தது. திரைப்படம் முடிந்த பின் அனைத்து பார்வையாளர்களும் எழுந்து நின்று தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். திரையரங்கிற்கு வெளியே காத்திருந்த இயக்குநர் ராம், தங்கமீன்கள் சாதனா மற்றும் தயாரிப்பாளர் P L தேனப்பன் ஆகியோரிடம் பார்வையாளர்கள் தங்கள் […]