BV Frames நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது பாராட்டுக்களை தெரிவித்து, படக்குழுவினரை வாழ்த்தினார். இப்படத்தின் துவக்க விழாவில், தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடித்து இயக்குநர் சசி, கேமராவை ஆன் செய்து படக்குழுவிற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். […]