லதா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எம்.லதா, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படம் ‘ஏமாலி’. ‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான V.Z.துரை, இந்த ‘ஏமாலி’ என்னும் புதிய படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்தில் யதார்த்த நடிகர் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பு – M. […]