கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பாக 2008-ம் ஆண்டு காவிரி நதி நீர் பிரச்சினை ஒரு சிக்கலையெட்டியபோது கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. இதன் ஒரு பகுதியாக கர்நாடக திரைத்துறையினர் தமிழகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதேபோல் தமிழக சினிமா துறையினரும் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். தமிழக திரைத்துறையினர் நடிகர் விஜயகாந்த், இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் முன்பாக பெரும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி […]
“I Reduced My Weight In 10 Days For Adhi Maedhavigal” Heroine Ishara Nair
Remember Ishara Nair, who played ‘Banu’ in ‘Sadhuranga Vettai opposite Natty? Ishara is now all set to skip the hearts of youngsters once again by her next flick ‘ADHI MAEDHAVIGAL’, but this time not with her innocence, but with her fun loving nature. Produced by Malcolm under the banner ‘Absolute Pictures’ and directed by debutante […]
இயக்குனர் கௌரவ்வை பாராட்டிய ஓமன் நாட்டு அமைச்சர்
“அறிமுக இயக்குநர்களுக்கும் அவர்களின் தரமான படைப்புகளுக்கும் உகந்த ஆண்டு 2017.
“அறிமுக இயக்குநர்களுக்கும் அவர்களின் தரமான படைப்புகளுக்கும் உகந்த ஆண்டு 2017. அதனை எங்களின் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தும்” என்கிறார் ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் சாகர் சத்வானி ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறும், அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்வதும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் சவாலான காரியமாகவே இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் உலக சினிமா மீது வைத்திருக்கும் பேரார்வம் தான். தற்போது அவர்களின் ரசனைகளை ‘ஒரு கிடாயின் […]
அறிமுக இயக்குநர் படத்தில் நடிக்கும் சரத்குமார்
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் பெயர் போனவர் நடிகர் சரத்குமார். திரையுலகிற்கு அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், நாளுக்கு நாள் அவரது உடலழகு மெருகேறி கொண்டே போகின்றது. இன்றைய தலைமுறை கதாநாயகர்களுக்கும் அவர் போட்டியாக இருப்பதற்கு அவரின் கட்டுக்கோப்பான உடலமைப்பும் ஒரு மிக முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். சவாலான கதைக்களங்கள் மீது பேரார்வம் கொள்வது மட்டுமில்லாமல் தன்னை அந்த படத்திற்காக முழுவதுமாக அர்ப்பணித்து கொள்வது தான் சரத்குமாரின் சிறப்பம்சம் என்று திரை உலக வர்த்தகர் […]
பிரபுதேவா எழுதிய பாடல் கும்பகோணத்தில் படமாக்கப்பட்டது..!
வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்தை தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பிரபுதேவா நாயகனாக நடிக்கும் ‘எங் மங் சங்’ படத்தையும் தயாரிக்கிறார்கள். […]
தேசிய விருதுக்குக் குறி வைக்கும் ‘பள்ளிப் பருவத்திலே’ திரைப்படம்
வி.கே.பி.டி. கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘பள்ளிப் பருவத்திலே.’ இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். பொன்வண்ணன், பேராசிரியர் ஞானசம்மந்தம், ‘பருத்தி வீரன்’ […]
மூன்று மாதங்களில் நான்கு படங்கள் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
இந்த 2017 ஆம் ஆண்டை மிக பெரிய வெற்றியோடு துவக்கி இருக்கிறது, இந்தியாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’. ஹிந்தியில் வெளியாகி, 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் ஜாலி LLB 2, பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படங்களும், லோகன் மற்றும் தி பாஸ் பேபி போன்ற ஆங்கில வெற்றி படங்களுமே அதற்கு சிறந்த உதாரணம். ‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘குக்கூ’ மற்றும் ‘முண்டாசுப்பட்டி’ போன்ற தரமான […]
பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன் எம் எஸ் பாஸ்கர்
“பிரபல தொலைக்காட்சி தொடர் மூலம் பட்டாபி என்ற அடையாளத்தை பெற்ற நான், தற்போது 8 தோட்டாக்கள் படம் மூலம் மூர்த்தி என்கின்ற புதிய அடையாளத்தை பெற்று இருக்கிறேன்” என்கிறார் எம் எஸ் பாஸ்கர் ஒரு தரமான திரைப்படத்திற்கு பிரம்மாண்ட தயாரிப்பும், நட்சத்திர நடிகர் நடிகைகளும் அவசியம் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறது, சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு, எல்லா […]
நடிகர்கள் சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் விஷாலுக்கு இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள்
தங்கர் பச்சான் அறிக்கை: எந்தப்பக்கம் திரும்பினாலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.அவர்களை வீதியில் கதறவிட்டு நாமும் அரசாங்கங்களோடு சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்களின் தேவைகளுக்காகவும்,ஊதியங்களுக்காகவும் போராடி வெற்றிபெற்றுவிட முடியும்.ஆனால், விவசாயிகள் மட்டும் காலம் முழுவதும் போராடிகொண்டே இருக்கவேண்டியதுதான். அவர்கள் நமக்கு தேவையான உணவுக்காகவும் சேர்த்துதான் போராடுகிறார்கள் என்பது புரியாமல் பொதுமக்கள் எனும் போர்வையில் நாம் எல்லோரும் விலகிக்கொண்டு விட்டோம். விவசாயிகளை கெஞ்ச விடுவது நமக்கும், நம் தேசத்துக்கும் அவமானமில்லையா? போராட்ட இடங்களை கடந்து […]