Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மூன்று மாதங்களில் நான்கு படங்கள் – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்

இந்த 2017 ஆம் ஆண்டை மிக பெரிய வெற்றியோடு துவக்கி இருக்கிறது, இந்தியாவின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’. ஹிந்தியில் வெளியாகி, 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் ஜாலி LLB 2, பத்ரிநாத் கி துல்ஹனியா திரைப்படங்களும், லோகன் மற்றும் தி பாஸ் பேபி போன்ற ஆங்கில வெற்றி படங்களுமே அதற்கு சிறந்த உதாரணம்.

‘ராஜா ராணி’, ‘காக்கா முட்டை’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘குக்கூ’ மற்றும் ‘முண்டாசுப்பட்டி’ போன்ற தரமான படங்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கிய ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’, இந்த 2017 ஆம் ஆண்டில் நான்கு படங்களை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏ ஆர் முருகதாஸ், வெற்றிமாறன் அட்லீ போன்ற பிரபல இயக்குநர்கள் – தயாரிப்பாளர்கள் ஆகியரோடு மீண்டும் கை கோர்த்து இருப்பது மட்டுமின்றி நடிகர் விஷ்ணுவுடனும் தற்போது இணைந்து பணியாற்ற இருக்கின்றது . மேலும் வர இருக்கும் மூன்று மாதங்களில் தொடர்ந்து நான்கு தரமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்க இருக்கின்றது பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்.

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லீ இணை தயாரிப்பு செய்து, திகில் கலந்த நகைச்சுவை பாணியில் உருவாகி இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை மே 19 ஆம் தேதி அன்றும், ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில், அதிரடி கதை களத்தில் உருவாகி இருக்கும் ‘ரங்கூன்’ படத்தை ஜூன் 9 ஆம் தேதி அன்றும், தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் தயாரிப்பில், அரசியல் பிண்ணனியில் உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜெய்’ படத்தை ஜூலை 7 ஆம் தேதி அன்றும் வெளியிடுகின்றது – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ். இதை தவிர, விஷ்ணு நடித்து, ஜூன் 23 ஆம் தேதி வெளியாகும் நகைச்சுவை படமான ‘கதா நாயகன்’ படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் விநியோகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸின் படங்கள் பெரும்பாலானவை, அறிமுக இயக்குநர்களால் இயக்கப்பட்டவை தான் என்பதை உறுதியாகவே சொல்லலாம். அட்லீயின் ராஜா ராணி, மணிகண்டனின் காக்கா முட்டை, சரவணனின் எங்கேயும் எப்போதும் போன்ற திரைப்படங்களே அதற்கு சிறந்த உதாரணம். தற்போது அதே பாணியை, ஹைக் இயக்கி இருக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற”, ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் ரங்கூன் மற்றும் ராஜ்குமார் இயக்கி இருக்கும் அண்ணனுக்கு ஜெய் படங்கள் மூலம் பின்பற்றி வருகிறது – பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்.

Back To Top
CLOSE
CLOSE