Flash Story
Chimera Trailer Out Now
’ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்

Category: News

‘’பதுங்குவது பாய்வதற்குத்தான்”; விமலின் அதிரடி

வெள்ளந்தியான வேடங்களில் யதார்த்தமாக நடிப்பவர் யாரென்று கேட்டால் சட்டென நினைவுக்கு வருவது நடிகர் விமலின் முகம் தான். சமீபகாலமாக விமல் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ‘புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்’ என்கிற விதமாக உற்சாகமாகவே இருக்கிறார் விமல்.. இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளதே அதற்கு காரணம். இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது என்பது இன்னொரு ஸ்பெஷல்.. இந்தநிலையில் விமல் நேற்று விமரிசையாக […]

விஜய் சேதுபதியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன் – கருப்பன் பட இயக்குனர்

ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் ஏ எம் ரத்னம் தயாரிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, ரேணுகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியிருக்கும் படம் ‘கருப்பன்’. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை இன்று மாலை வெளியாகிறது. “இதற்கு முன்பே ஒரு படத்தில் பன்னீர் செல்வமும் நானும் வேலை செய்தோம். அது வெளிவரவில்லை. முதலில் கருப்பன் தான் வெளி வந்திருக்கிறது. மக்கள் செல்வன் பட்டத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு நபர் விஜய் சேதுபதி தான். அவர் மற்றவர்களுடன் பழகும் […]

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் : கவிஞர் வைரமுத்து பேச்சு

நீதிபதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை கோடம்பாக்கத்தில் ‘மெட்வே’ மருத்துவமனையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மருத்துவமனையைக் கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்தார். ‘நீயா நானா’ புகழ் கோபிநாத் , நடிகர் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் மருத்துவமனையைத் திறந்து வைத்துக் கவிப்பேரரசு வைரமுத்து பேசினார். அவர் பேசும் போது, “டாக்டர் பழனியப்பன் அவர்களின் […]

கிரிக்கெட் ஆடத்தெரிந்த கதாநாயகியை தேடும் அருண்ராஜா காமராஜ்

சினிமா இயக்கத்தின் மீது அயராத காதலும் அதற்கான திறமையும் இருக்கும் ஒருவர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார் . பாடலாசிரியராகயும் பாடகராகவும் பல ஹிட்டுகளை கொடுத்து புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் இயக்குநராகிறார் என்பதே தற்பொழுதைய பரபரப்பான செய்தி. பல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக தன்னை நிரூபித்துக்கொள்ள முனைப்போடு உள்ளார். அருண்ராஜாவையும் அவரது இயக்குனர் கனவையும் அறிந்தவர்கள் அதற்காக அவர் போட்டுள்ள உழைப்பையும் நன்கு அறிவார்கள். தனது முதல் இயக்கம் குறித்து அருண்ராஜா […]

‘ப்ரேமம்’ கூட்டணியின் அடுத்த அசத்தல்

‘ப்ரேமம்’ படத்தில் நண்பர்களாகவே வாழ்ந்த நிவின் பாலியும் அல்தாப் சலீமும் இணைந்து நடித்துள்ள ‘ஜண்டுகளூடே நட்டில் ஓரிடவேளா’ இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. வரும் ஓணம் திருநாளானன்று வெளி ஆகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. கேரளாவை தாண்டியும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் நிவின் பாலியே இப்படத்தை தயாரித்துள்ளார்.பெரும் வெற்றி பெற்ற ‘ஆக்ஷன் பிஜு’ படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தின் டீசரும், ‘எந்தாவூ’ பாடலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை […]

ஆரியின் அறக்கட்டளை சார்பாக ‘நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு

ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நானும் ஒரு விவசாயி என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு , திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது. இதில் சத்யபாமா யூனிவெர்சிட்டி மற்ற ஜேபிஆர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது. இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு […]

ஆக்சன் கிங் அர்ஜுனின் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் “சொல்லிவிடவா”

முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் வெகு சுவாரசியமானது. இதுவரை […]

துல்கர் சல்மானின் “சோலோ”வை கைப்பற்றிய ட்ரெண்ட் மியூசிக்

கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களை தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ் மற்றும் மலையாள இசை உரிமையை கைப்பற்றியுள்ளது. ரசிகர்களை ஈர்த்த அருமையான டீசரை தொடர்ந்து படத்தின் நாயகன் துல்கரின் ருத்ரா கதாபாத்திரத்தை சுற்றிய 4 பாடல்களை வெளியிட்டது படக்குழு. பீட்சா, டேவிட், சைத்தான் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து பிஜாய் நம்பியார் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படமாக இந்த […]

Back To Top
CLOSE
CLOSE