Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

கிரிக்கெட் ஆடத்தெரிந்த கதாநாயகியை தேடும் அருண்ராஜா காமராஜ்

சினிமா இயக்கத்தின் மீது அயராத காதலும் அதற்கான திறமையும் இருக்கும் ஒருவர் நிச்சயம் ஒரு நாள் இயக்குனர் ஆவார் . பாடலாசிரியராகயும் பாடகராகவும் பல ஹிட்டுகளை கொடுத்து புகழ் பெற்ற அருண்ராஜா காமராஜ் இயக்குநராகிறார் என்பதே தற்பொழுதைய பரபரப்பான செய்தி. பல திறமைகள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இயக்குனராக தன்னை நிரூபித்துக்கொள்ள முனைப்போடு உள்ளார். அருண்ராஜாவையும் அவரது இயக்குனர் கனவையும் அறிந்தவர்கள் அதற்காக அவர் போட்டுள்ள உழைப்பையும் நன்கு அறிவார்கள்.

தனது முதல் இயக்கம் குறித்து அருண்ராஜா காமராஜ் பேசுகையில், ” நான் சினிமாவுக்கு வர முதல் மற்றும் முக்கிய காரணமே இயக்குநராக வர வேண்டும் என்றுதான். இயக்குனராவது எனது வாழ்நாள் ஆசையாகவும் கணவாகவும் இருந்து வருகிறது. இதற்கு முன்பு பல குறும்படங்களை எழுதி இயக்கி குறும்பட போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.’வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமும் எனக்கு மேலும் உதவியாக இருந்தது. ஒரு படத்தை இயக்கம் பொறுப்பை ஏற்க நான் தயாராக இருப்பதாக இப்போது உணர்கிறேன். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன். சமீபத்தில் பல லட்சம் ரசிகர்களை கவர்ந்து கொண்டாட வைத்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை ஆட்டத்திற்கு முன்பே இக்கதையை தயார் செய்துவிட்டேன். கனவுகளுக்காக போராடுவதும், அதற்கு குடும்பத்தாரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்றும், ஒரு தந்தைக்கும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது பெண்ணுக்கும் இருக்கும் அழகான உறவையும் இப்படத்தில் காணலாம். நெகிழவைக்கும் சில நிஜ வாழ்க்கை சம்பவங்களையும் இக்கதையில் சேர்த்துள்ளேன். கிரிக்கெட்டும் ஆட தெரிந்த நடிக்கவும் தெரிந்த பெண்களை கதாநாயகி மற்றும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களுக்கு தேர்ந்தெடுக்க ஆடிஷன் நடத்தவுள்ளோன். இதுவரை வெளிவராத பல அறிய திறமைசாலிகளை இந்த ஆடிஷன் மூலமாக வெளிகொண்டுவந்து இப்படத்தை மெருகேத்த உள்ளோம். எனது இந்த இயக்குனர் படலத்தை மிகவும் உற்சாகத்திடம் எதிர்நோக்கியுள்ளேன்” எனக்கூறினார் அருண்ராஜா காமராஜ்.

விருப்பமுள்ளோர் தங்களது விவரங்களை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : [email protected]

Back To Top
CLOSE
CLOSE