தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இன்றைய, நாளைய இளைஞர்களின் விடிவெள்ளி என்று அனைவராலும் கருதப்படுபவர் டாக்டர் அப்துல் கலாம். இன்று அப்துல் கலாமின் 2ம் ஆண்டு நினைவு தினம் நாடெங்கிலும் போற்றப்படுகிறது. மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு என்ற இடத்தில் அவரது சமாதி அருகே மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் இந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர் தன்னுடைய படைப்புகளால் அழகு […]
நிபுணன்’ ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது நடிகர் பிரசன்னா..
பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இது போல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து நடித்து வெற்றிகளை சுவைத்தவர் நடிகர் பிரசன்னா. Action king அர்ஜுன் உடன் இணைந்து இவர் நடித்துவரும் ஜூலை 28ஆம் தேதி வெளி வர உள்ள படம் “நிபுணன்”. இது அர்ஜுனின் 150வது படமாகும். அர்ஜுன் மற்றும் பிரசன்னாவுடன் , வரலக்ஷ்மி சுருதி ஹரிஹரன் மற்றும் வைபவ் போன்ற […]
‘விவேகம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகும் அக்ஷரா ஹாசன்!
லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதேபோல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்தி பெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால் பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு ‘விவேகம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்சரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் […]
நிவின் பாலி அமலா பால் நடிக்கவிருக்கும் ”காயம்குளம் கொச்சுண்ணி” திரைப்படம்
உள்ளூர் கதைகளுக்கும் ,உள்ளூர் நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கும் நமது நாட்டில் பஞ்சமில்லை. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் கலாச்சாரத்திற்கேற்ப உள்ளோர் கதைகளும் , அதன் கதாநாயகர்களும் இருந்துள்ளனர். அவ்வாறு , கேரளாவின் புகழ் பற்ற காயம்குளம் கொச்சுண்ணியின் வாழ்க்கை படமாக்கப்படவுள்ளது. ’36 வயதினிலே’ படம் மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பு பெற்ற இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இப்படத்தை இயக்கவுள்ளார். ”காயம்குளம் கொச்சுண்ணி” என்றே படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது . ” மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்திருக்கும் […]
டிராஃபிக் ராமசாமியாக – எஸ்.ஏ.சந்திரசேகரன்
எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்கள் சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற சமூக பிரச்சனைகளை அலசிய முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். அதை பற்றி அவர் கூறிய போது “ பொதுமக்களின் நலனிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை தொடர்ந்தவர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி. அப்படி தொடர்ந்த பல வழக்குகளில் மக்களுக்கு சாதகமான பல அதிரடி தீர்ப்புகளையும் வாங்கி தந்தவர். இத்தீர்ப்புகளினால் பாதிக்கப்பட்ட […]
‘ஸ்பைடர்’ படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்றது லைகா நிறுவனம்!
ரசிகர்களின் ரசனையை துல்லியமாக கணித்து அதற்கேற்ப படங்களை தயாரிப்பதிலும், வாங்கி வெளியிடுவதில் வல்லுனர்களாக இருக்கும் நிறுவனம் ‘லைகா’ productions. தமிழ் சினிமா உலகின் மிக முக்கிய சக்திகளில் ஒன்றாக மாறிவரும் இந்த நிறுவனம்’ தற்பொழுது ‘ஸ்பைடர்’ படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்றுள்ளது. எல்லா வயது ரசிகர்களாலும், மொழிக்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் மகேஷ் பாபுவும் , திரைக்கதையிலும் இயக்கத்திலும் இந்தியாவே ஆச்சிரியத்தில் பார்க்கும் A R முருகதாஸும் முதல் முறையாக ‘ஸ்பைடர்’ படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் இந்த சங்கமம் […]
‘கோலி சோடா 2’வில் இயக்குநர் சமுத்திரக்கனி!
இரண்டாம் பாகங்கள் உருவாகும் சாத்தியம் அனைத்து வெற்றி படங்களுக்கும் அமைவதில்லை. 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற கோலி சோடாவின் கதை எல்லா மொழிகளிலும் படமாக்கக்கூடிய திறன் கொண்ட கதையாகும். இக்கதையம்சத்தில் இரண்டாம் பாகத்திற்கான திறனும் சாத்தியமும் நிறைந்து இருந்தது. அது போலவே சமீபத்தில் ‘கோலி சோடா 2’ படத்தின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அறிவித்த நாளிலிருந்தே படப்பிடிப்பு முழு வேகத்தில் நடந்துவருகிறது . இக்கதை நான்கு முதன்மை கதாபாத்திரங்களை சுற்றி […]
புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..!
“புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய வியாதி தான்.. அது சாபக்கேடு அல்ல” ; பேராசிரியர் டாக்டர் சுப்பிரமணியன் ஊக்கம்..! புற்று நோயாளிகளின் துயர் துடைக்கும் ‘வசந்தம்’ அமைப்பினர்..! புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை, கிட்டத்தட்ட சாவின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றி மறுபிறவி அளிக்கும் உன்னதமான பணியை செய்து வருகிறது வி.எஸ்.மருத்துவமனை. தற்போது அதன் இன்னொரு அம்சமாக, புற்று நோயாளிகளுக்கு உதவும் விதமாக வி.எஸ்.மெடிக்கல் ட்ரஸ்ட் மூலமாக 200 புற்று நோயாளிகளை கொண்ட ‘வசந்தம்’ என்கிற குழுவை உருவாக்கியுள்ளது […]
“எல்லா நேரங்களிலும் சத்தம் பற்றிய யோசனை தான்” ; சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார்…!
“‘பேராண்மை உண்மையிலேயே சவாலான படம் தான்” ; அனுபவம் பகிர்கிறார் சவுண்ட் இஞ்சீனியர் உதயகுமார் “வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” ; ரகசியம் உடைக்கும் உதயகுமார் “ரசிகர்கள் சத்தத்துடன் போட்டிபோட்டு வேலைசெய்ய வேண்டியுள்ளது” ; உதயகுமாரின் ‘சவுண்ட்’ அனுபவங்கள்..! ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் […]
மீண்டும் இணையும் விஜய்சேதுபதி காயத்ரி..
“நடுவுல கொஞ்சம் பாகத்தை காணோம”படம் மூலம் ரசிகர்களிடம் மிக பிரபலமானவர் காயத்ரி. மிக திறமையான நடிகை என போற்றப் படும் இவர் இப்பொழுது தொடர் வெற்றிகளால் உச்சத்தை தொட்டு இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். “காயத்ரி மிக சிறந்த நடிகை. அவரது திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு கிட்டவில்லை என்பதுதான் என் கருத்து. “ஒரு நல்ல நாள் […]