Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மீண்டும் இணையும் விஜய்சேதுபதி காயத்ரி..

“நடுவுல கொஞ்சம் பாகத்தை காணோம”படம் மூலம் ரசிகர்களிடம் மிக பிரபலமானவர் காயத்ரி. மிக திறமையான நடிகை என போற்றப் படும் இவர் இப்பொழுது தொடர் வெற்றிகளால் உச்சத்தை தொட்டு இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். “காயத்ரி மிக சிறந்த நடிகை. அவரது திறமைக்கு ஏற்ற பாத்திரங்கள் அவருக்கு கிட்டவில்லை என்பதுதான் என் கருத்து. “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” அவருக்கு ஒரு ராசியான படமாக அமையும் . இந்தக் கதாபாத்திரம் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கும்.” என்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார்.

அம்மே நாராயணா productions மற்றும் ‘7 C’ என்டர்ர்டைன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி உடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக். ரங்கூன், இவன் தந்திரன் ஆகிய படங்களுக்கு பிறகு இவரது படங்களுக்கு எதிர்பார்ப்பு கூடி இருப்பது குறிப்பிட தக்கது.ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்க, ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய துரித வேகத்தில் தயாராகும் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” படத்துக்கு இப்போதே திரை உலக வர்த்தகத்தினர் இடையே ஏகப்பட்ட வரவேற்ப்பு

Back To Top
CLOSE
CLOSE