இந்தப் படத்தோட ஆடியோ ரிலீஸ் பங்ஷன்லேயே நிறைய பேசியாச்சு. இன்னிக்கு இந்தப் படத்தைப் பத்தி மட்டும் பேசிடறேன். இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தைத் தயாரிப்பது மிக, மிக எளிது, ஆனா, அந்தப் படத்தை வெளியிடுவது எவ்வளவு கஷ்டம்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை பர்ஸ்ட் காப்பி பேஸ்ல நான்தான் தயாரித்தேன். அதுல நான் லைன் புரொடியூசர்.. இராம.நாராயணன் சார்தான் புரொடியூசர். ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்துலேயும் நான் லைன் புரொடியூசர்தான், புரொடியூசர் […]
62-வது பிலிம்பேர் அவார்டு – போட்டியிடும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மற்றும் தொழில்நுட்ப கலைஞசர்கள் பட்டியல்…
62-வது பிலிம்பேர் அவார்டு – போட்டியிடும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் மற்றும் தொழில்நுட்ப கலைஞசர்கள் பட்டியல்… இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கான மத்திய, மாநில விருதுகளுக்கு அடுத்து பெருமையாகக் கருதப்படுவது ஃபிலிம்பேர் பத்திரிகை வருடந்தோறும் வழங்கும் திரைப்பட விருதுகள்தான் அந்த வரிசையில், சென்ற 2014-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்பட விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருப்பவர்களின் பட்டியலை அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. சிறந்த திரைப்படம் கத்தி காவியத்தலைவன் மெட்ராஸ் முண்டாசுப்பட்டி வேலையில்லா பட்டதாரி சிறந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் – கத்தி […]
2014 பிலிம் பேர் விருதுக்கு போட்டி போடும் படங்கள்
2014-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படங்களுக்கான பிலிம்பேர் பத்திரிகையின் விருதுகளுக்கான போட்டியில் ‘காவியத்தலைவன்’, ‘மெட்ராஸ்’, ‘கத்தி’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய 4 படங்களே அதிகமான பிரிவுகளில் பிரதானமாக மோதுகின்றன. ‘காவியத்தலைவன்’ திரைப்படம் மிக அதிகமாக சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், பாடகி என அனைத்துப் பிரிவுகளிலுமே போட்டியிடுகிறது. ‘மெட்ராஸ்’ திரைப்படம் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, இசையமைப்பாளர், பாடகர், […]
ஜூன் 17 வெளிவருகிறது “பாபநாசம்”
மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான மலையாள படம் ‘த்ரிஷ்யம்’. விமர்சகர்கள் மத்தியிலும், வசூலிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழி ரீமேக் உரிமையையும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனம் பெற்றது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக்காகி விட்டது. தமிழில் கமல், கெளதமி, சார்லி, கலாபவன் மணி உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கி இருக்கிறார். ‘பாபநாசம்’ என பெயரிடப்பட்ட […]
வேந்தர் மூவிஸ் S மதன் தயாரிக்கும் படத்தை ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்
மூனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற தொடர் வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் S.மதன் தயாரிக்கும் புதிய படத்தினை எழுதி இயக்கி நடிக்கிறார். முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு ஆக்ஸ்ட் மாதத்தில் துவங்குகிறது. கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது.
ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ (‘Terminator Genisys’)
“ஐ வில் பி பேக்”, என்ற தனது பிரபலமான வசனத்துக்குரியவாறே மீண்டும் ரசிகர்களை ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ திரைப்படத்தின் மூலம் கொண்டாட்டத்தில் ஆழ்த்த வருகிறார் அர்னால்ட் ஷ்வாஸ்நேகர்.‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ தமிழில் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ என்ற பெயரில் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது. ஆக்ஷன், அதிரடி பொங்கும் கதையம்சம் கொண்ட டெர்மினேட்டர் பட வரிசையில் அடுத்த பகுதியான‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ (‘Terminator Genisys’). எதிர்காலத்தில் நடக்கும் கதையாக தொடங்கி சாரா கானர்,ஜான் கானர், கையில் ரீஸ் மற்றும் டெர்மினேட்டர்கள் […]
தருண்கோபி நடிக்கும் “ வெறி “ ( திமிரு – 2 )
திமிரு, காளை போன்ற வெற்றி படங்களை இயக்கிய தருண்கோபி இயக்கி நாயகனாக நடிக்கும் படம் “ வெறி “ (திமிரு – 2 ) இந்த படத்தை கோயம்பேடு மார்கெட் மு.வெள்ளைப் பாண்டி ஆசியுடன் S.S. PRODUCTION என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.சரவணன் தயாரிக்கிறார். இன்னொரு நாயகனாக ரமணா நடிக்கிறார். கதாநாயகியாக காதல் சந்தியா, ஒரு புதுமுக நடிகை ஒருவரும் நடிக்கிறார். மற்றும் சுஜாதா, காதல்சுகுமார், முத்துராமன், பரதேசி பாட்டி, கும்கி பாட்டி, மனோஜ், தவசி, […]
கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி.
40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ், கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு. ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து பைரவி படத்தை விளம்பரம் செய்தார். விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984 ஆம் ஆண்டு தயாரிப்பாளராகி… யார் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் […]
சினிமாவை அழிக்கும் நடிகர்கள் தயாரிப்பாளர் டி.சிவா அதிர்ச்சி பேச்சு.
சினிமாவை அழிக்கும் நடிகர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு சினிமா விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கார்த்திக் சுப்பராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியுள்ள படம் ‘54321: இப்படத்தை பானு பிக்சர்ஸ் ராஜா மற்றும் மெயின் ஸ்ட்ரீம் புரொடக்ஷன்ஸ் ஜி.வி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ளனர். இரண்டு மணிநேரத்தில் நடக்கும் கதையே இரண்டு மணி நேரப் படமாகியுள்ளது. ஜி.ஆர். அர்வின், ஷபீர், பவித்ரா, ரோகிணி, ரவிராகவேந்திரா, ஜெயகுமார் நடித்துள்ளார்கள். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் […]
நடிகர் விஷால் சரத்குமாருக்கு சவால் நான் கேட்ட மூன்று கேள்விக்கு பதில் எங்கே ?
நடிகர் சங்க விவகாரத்தில் சரத்குமார் – விஷால் மோதல் தெரிந்ததே…. விஷால் நடிகர் சங்க உறுப்பினர்களிடையே தவறான தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று அண்மையில் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இருதரப்பிலும் அறிக்கைகள் மூலமாக அறிக்கைகள் ஆரம்பித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர், நடிகர் சங்க பிரதிநிதிகள் சேர்ந்து சமரசம் செய்ய முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் விஷாலிடம் கேட்டோம் : நான் […]