Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜூலை 3 ஆம் தேதி வெளியாகிறது ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ (‘Terminator Genisys’)

unnamed (2)“ஐ வில் பி பேக்”, என்ற தனது பிரபலமான வசனத்துக்குரியவாறே மீண்டும் ரசிகர்களை ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ திரைப்படத்தின் மூலம் கொண்டாட்டத்தில் ஆழ்த்த வருகிறார் அர்னால்ட் ஷ்வாஸ்நேகர்.‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ தமிழில் ‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ என்ற பெயரில் ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது.

ஆக்ஷன், அதிரடி பொங்கும் கதையம்சம் கொண்ட டெர்மினேட்டர் பட வரிசையில் அடுத்த பகுதியான‘டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்’ (‘Terminator Genisys’). எதிர்காலத்தில் நடக்கும் கதையாக தொடங்கி சாரா கானர்,ஜான் கானர், கையில் ரீஸ் மற்றும் டெர்மினேட்டர்கள் இடையே வெவ்வேறு கால அமைப்புகள் நடக்கும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது.

தனது டெர்மினேட்டர் கதாப்பாத்திர பிரவேசத்தை பற்றி அர்னால்டு கூறுகையில், “எனது நினைவுக்கு தெரிந்த வரை 30 வருடங்களுக்கு மேல் ஒரு தொடரில் ஒரே நடிகர் நடிப்பது இது தான். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் கோனான் தி பார்பேரியன் போன்று நான் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களையும் மீண்டும் நடிக்க அழைக்கிறார்கள். இது வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் அந்தந்த கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் மரியாதையும் எதிர்பார்ப்பும் எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது” என்கிறார்.

பிரம்மாண்ட படமான ‘தோர்: தி டார்க் வேர்ல்ட் அண்ட் கேம் ஆஃப் த்ரான்ஸ்’ படத்தின் இயக்குனர் ஆலன் டெய்லர் தான் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை இயக்கியதைப் பற்றி கூறும்பொழுது “ தோர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில் ஈடுபடுவது சற்று அயர்ச்சியாகவே இருந்தது எனினும், ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ படத்தின் வெற்றியை கணித்து இருந்ததால் விட இயலவில்லை. ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய முதல் இரண்டு பாகங்கள் ஆக்ஷன் பின்னணியாய் இருந்தாலும் மானிடராய் இருப்பதன் உன்னதத்தை உணர்த்துவதாய் அமைந்திருந்தது என்னை பெரிதும் ஈர்த்தது.” என்றார்

Skydance Productions மற்றும் Paramount Pictures நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பாக வரும் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ திரைப்படத்தை Viacom 18 Motion Pictures நிறுவனத்தார் இந்தியாவில் வெளியிடுகிறார்கள். ஆங்கிலம்,ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என பல்வேறு மொழிகளில் Imax 3D, 3D டிஜிட்டல் மற்றும் 2D என அனைத்து திரையிடல் தொழிநுட்பத்திலும் தயாராகும் ‘டெர்மினேட்டர் ஜெனிசிஸ்’ ஜூலை 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE