ஷாலோம் ஸ்டுடியோஸ் & இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘சாட்டை’ படத்தை இயக்கிய இயக்குனர் அன்பழகன் எம்.மாலா Msc,B.Ed, TTC.,D.C.A. என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்கிறார். இந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் வருகிற (31 – 08 – 2014 ) ஞாயிற்றுக்கிழமை அன்று அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டம் அருகில் உள்ள செந்துறையில் நடைபெற உள்ளது.திருமண விழாவில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆதி “வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்” தமிழாக்கத்தில் நடிக்கவுள்ளார்
அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் சத்ய பிரபாஸ் முதன் முதலாக இயக்கும், ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து நடிக்கும் “யாகவராயினும் நாகாக்க” படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். யாகவராயினும் நாகாக்க படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதர்ஷா சித்ராலயா பிரைவேட் […]
கிருஷ்ணா இயக்கத்தில் “மானே தேனே பேயே”
கல்சன் மூவீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பட நிறுவனம் தற்போது G.V. பிரகாஷ் – ஸ்ரீதிவ்யா சாரிக் நடிக்க மணிநாகராஜ் இயக்கத்தில் “ பென்சில் என்ற படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து ஆரி கதாநயாகனாக நடிக்கும் “ மானே தேனே பேயே” என்ற படத்தையும் இந்நிறுவனம் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது. “நெடுஞ்சாலை “ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கிருஷ்ணா – ஆரி இணையும் படம் இது. கதாநாயகியாக பிரபல […]
கபிலன் “ஐ” படத்துக்காக விமானத்தில் பறந்தபடி எழுதிய பாடல்
விக்ரம் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் ‘ஐ’ படத்தில், 3 பாடல்களை எழுதியிருக்கிறார், பாடல் ஆசிரியர் கபிலன். இந்த படத்துக்காக ஒரு பாடலை விமானத்திலும், மலைவாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் டைரக்டர் ஷங்கருடன் அமர்ந்து அவர் எழுதியுள்ளார். ”டைரக்டர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில், பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம்பெறுகிறது என்பதை சுருக்கமாக கூறிவிடுவார். பிரகு அந்த பாடல் எங்கெல்லாம் படமாக்கப்பட இருக்கிறது, கதாநாயகன்&கதாநாயகி எந்தவிதமான […]
அஞ்சலிக்கு ஒரு வேண்டுகோள் களஞ்சியம் உயிர் காக்க வேண்டும்
இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி ஓங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.உடம்பு முழுவதும் பலத்த அடி பட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லை.யாரை பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே மனதில் நிலைக்கிறது. மற்றபடி யார் என்ன என்பது பற்றிய உணர்வு ஏற்ப்படுத்த வில்லை அப்போதைக்கப்போது கண் விழிக்கிறார். இன்னும் […]
சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் புரட்சி திலகம் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் “ சண்டமாருதம் “ அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார். திரைக்கதை […]
நடிகர் சென்ராயன் காதல் திருமணம்
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன்.அதை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சென்ராயன். ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து […]
கபடம்
அஜீத் அறிமுகமான “அமராவதி” மற்றும் தலைவாசல் உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த சோழாபொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் மற்றும் மௌண்டன் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கபடம் “ இந்த படத்தில் சச்சின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அங்கனாராய் நடிக்கிறார். மற்றும் ஆதித்யா, காதல்சரவணன், அணிகா, அஸ்வின், ஹேமா ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – எம்.கே.மணி ஒளிப்பதிவு – கே.திருநாவுக்கரசு இசை – சாஷி / பாடல்கள் – நா.முத்துகுமார் கலை […]
எனது 17 படங்களுக்கும் “ U “சர்டிபிகேட் தான் – வி.சேகர்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து, இசைபின்னணி, காதல், காமெடி என ஒவொருவரும் ஒரு பாணியை நூல் பிடித்தாற் போல் பிடித்து வெற்றி வாகை சூடியவர்கள் பலர் ! அதில் குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர். அவரிடம் பேசினோம்…. · குடும்பக் கதைகள் மட்டும்தான் உங்கள் பாலிசியா ? நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம்..குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம்! எதிர்கால சிந்தனை கூட […]
ஜிகினா
மின்னுவது பொன் என்பதே திரை உலகின் இன்றைய கோட்பாடு. எதிலும் திட்டமிட்டு , வெற்றி மட்டுமே குறிக்கோள் என செயல்படும் , தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயர் பெற்ற இயக்குனர் லிங்கு சாமி துவக்கி வைத்த ‘ ஜிகினா’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.தனது நண்பர் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகினா’ படத்துக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்கி லிங்குசாமி வந்தது குறிப்பிட தக்கது.சமீபத்தில் வந்து பெரும் வெற்றி அடைந்த விஜய் வசந்த் […]