Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஜிகினா

pic 7மின்னுவது  பொன் என்பதே திரை உலகின் இன்றைய கோட்பாடு. எதிலும் திட்டமிட்டு , வெற்றி மட்டுமே குறிக்கோள் என செயல்படும் , தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயர் பெற்ற இயக்குனர் லிங்கு சாமி துவக்கி வைத்த ‘ ஜிகினா’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.தனது நண்பர் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகினா’ படத்துக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்கி லிங்குசாமி வந்தது குறிப்பிட தக்கது.சமீபத்தில் வந்து பெரும் வெற்றி  அடைந்த  விஜய் வசந்த் நடித்த ‘ என்னமோ நடக்குது’ படத்தை வெளியிட்டதும் லிங்குசாமியின் ‘ திருப்பதி brothers ‘ நிறுவனத்தினர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ ஜிகினா ‘ படத்தை ராகுல் PICTURES சார்பில் கே டி கே தயாரிக்கிறார்.’ தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன்  நாங்கள் திரை உலககிற்கு வர  காரணம் திருப்பதி BROTHERS நிறுவனம் தான்.எங்களுடைய முதல் பட பூஜைக்கு லிங்குசாமி அவர்களே வந்ததோடு , காமெராவை துவக்கி வைத்து இருப்பது, என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்று பெருமையுடன் கூறினார் தயாரிப்பாளர் கே டி கே.

விஜய் வசந்த் கதாநயாகனாக  நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளவர் சானியா. இவர்களோடு சிங்கம் புலி,’கும்கி ‘ அஷ்வின்,மற்றும் தற்போது தொலை காட்சியில் பிரபலமாகி வரும் ஒரு வளர்ந்து வரும் கலைஞர் ஒருவர்  படத்தில்  அறிமுகமாவது குறிப்பிட தக்கது.வித்தியாசமான கதை களம் உள்ள படங்களை இயக்கிய நந்தா பெரிய சாமி இந்த படத்தின்  கதை,திரைகதை அமைத்து, வசனம் எழுதி இயக்குகிறார்.

பாலாஜி ரங்கா ஒளிபதிவில், ஜோன் என்ற புதிய இசை அமைப்பாளர் யுக பாரதியின் பாடல்களுக்கு இசை அமைத்து அறிமுகமாக  உள்ளார்
‘ஜிகினா’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் துவங்கியது. முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்தி இந்த வருடம் இறுதியில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் படப்பிடிப்பு குழுவினர்.

பெயரை போலவே மிகவும் உற்சாகத்துடன் , பிரகாசத்துடன் துவங்கிய ‘ஜிகினா ‘ படத்தின் ஒவ்வொரு காட்சியும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருக்கும் ‘ என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி.

Back To Top
CLOSE
CLOSE