பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா தயாரிக்கும் ‘மசாலா படம்’ வேகமாக தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார். “ ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையை பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை […]
‘குற்றம் கடிதல்’ பிரம்மாவை பாராட்டிய பாரதிராஜா
“ என்னுடைய ‘ நிழல்கள்’ படத்தின் தோல்விதான் என்னை சாதாரணமான சினிமாவிற்குள் தள்ளியது, ‘நிழல்கள்’ வெற்றிப்பெற்றிருந்தால் உலகத்தரமான சினிமா பக்கம் சென்று இருப்பேன். நான் செய்ய முடியாத அந்த உலகத்தரமான சினிமாவை யாரேனும் செய்வார்களா என்று பல நாள் ஏங்கியதுண்டு. இன்றைய இளைஞர்களில் 50 சதவிதம் அப்படிப்பட்ட கதையுடன்தான் சினிமாவிற்குள் வருகிறார்கள்” என்று ஆரம்பித்தார் இயக்குனர் பாரதிராஜா. இவ்வாண்டு தமிழில் தேசிய விருது பெற்ற JSK ஃபிலிம் கார்போரஷன் நிறுவனத்தின் ‘ குற்றம் கடிதல்’ திரைப்படத்தைப் பற்றி […]
மே-1-ம் தேதி வெளியாகும்‘உத்தமவில்லன்’
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் வரும் மே-1-ம் தேதி வெளியாகும் இன்று அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், ஊர்வசி, சித்ரா லட்சுமணன், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஷம்தத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார். சென்ற ஆண்டு செப்டம்பர் […]
தமிழ் சினிமாவிற்கு துபாய் வில்லன் வி.கே
‘மணல்நகரம்’ படத்தின் துபாய் வில்லன் விகே. அண்மையில் வெளியான ‘மணல் நகரம்’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் விகே. படத்தின் ஒரு நாயகியான தன்ஷிகா மீது மோகம் கோண்டு அவரைப் பின்தொடரும் ஸ்டார் ஓட்டல் முதலாளி மோகன்ராஜாக நடித்திருப்பவர்தான் இந்த விகே..இவரது முழுப்பெயர் வினோத் குமார்.இவர் துபாயில் வசிக்கிறார். இனி அவருடன் பேசலாமே…. உங்கள் அறிமுகம் பற்றி? நான் பிறந்தது வளர்ந்தது கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் ஒரு கிராமம். பெற்றோருக்கு இரும்பு உருக்காலையில் வேலை.எனவே குடும்பம் ஜார்கண்ட் மாநிலம் […]
தருண்கோபியின் திமிரு – 2
விஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் திமிரு. அந்த படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதற்கு பிறகு நடிகராக திசை மாறிய தருண்கோபி. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். திமிரு படத்தின் இரண்டாம் பாகமான வெறி ( திமிரு 2 ) என்ற படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார். படத்தை டப்பிங்கில் பார்த்தால் செம ஸ்பீடு புல்லட்டிரெயின் போல போகிறது. டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்கிறது. படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.
“சிவப்பு” படத்துக்கு பச்சை மவுசு கூட்டிய ராஜ்கிரண்
புலி பதுங்கி வேட்டையாடும் என்று சொல்வார்களே அது மாதிரிதான் ராஜ்கிரண் பாலிசி. மஞ்சப்பை, கொம்பன் என்று வெற்றி வேட்டையாடிய ராஜ்கிரண் அடுத்து எதிர் பார்ப்புடன் இருப்பது சத்யசிவா இயக்கிய “ சிவப்பு “ படத்தை ! தயாரிப்பாளர் முக்தாகோவிந்தின் மரணத்தால் தடை பட்டிருந்த சிவப்பு படத்தை தேசிகன் என்பவர் ராஜ்கிரணின் கதாப்பாத்திரத்தால் ஈர்க்கப்பட்டார். உடனே படத்தை மொத்தமாக வாங்கி விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கிறார். சிவப்புக்கு பச்சை கொடி காட்டியாச்சு.
இந்தி பேசுகிறார் நடிகர் விவேக்
முக்தாசுந்தர் இயக்கத்தில் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படம் இங்கே எதிர் பார்த்த அளவு போகவில்லை. ஆனால் அந்த படத்தை இந்தியில் டப் செய்யப்பட்டது. “ பைசா ஹோ பைசா “ என்ற பெயரில் 150 தியேட்டர்களில் ரிலீஸ் செயப்பட்டது. எல்லா பி அன்ட் சி சென்டர்களில் நன்றாக போகிறது. காசு வந்துடும் என்று சொன்னார் முக்தாசுந்தர்.
Actress Bhavani reddy Stills
பரபரப்பான படப்பிடிப்பில் “ ஒரு மெல்லிய கோடு “
பல லட்சம் ரூபாய் அரங்கில் அர்ஜுன் – ஷாம் – மனிஷா கொய்ராலா குப்பி, வனயுத்தம் போன்ற வித்யாசமான படங்களை இயக்கியதன் மூலம் பரபரப்பான இயக்குனர் என பாராட்டப் பட்ட A.M.R.ரமேஷ் தற்போது இயக்கும் புதிய படத்திற்கு “ ஒரு மெல்லிய கோடு “ என்று பெயரிட்டுள்ளார். இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா , ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள். இசை […]
மேஜிக் பிரேம்ஸ் தயாரிக்கும் விஜய் இயக்கும் “ இது என்ன மாயம் “
சண்டமாருதம் வெற்றிப்படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் “ இது என்ன மாயம் “ இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். மற்றும் நவ்தீப், அம்பிகா, நாசர், சார்லி, ஜீவா, பாலாஜிவேணுகோபால், ஆர்,ஜே.பாலாஜி, அஜெய் டைடஸ், சுதாக்ஷினி ஐயர், காவ்யாஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – நிரவ் ஷா / இசை – G.V.பிரகாஷ்குமார் / பாடல்கள் – நா.முத்துகுமார் […]