Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

மே-1-ம் தேதி வெளியாகும்‘உத்தமவில்லன்’

Tamil 11x15  - 2திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘உத்தமவில்லன்’ திரைப்படம் வரும் மே-1-ம் தேதி வெளியாகும் இன்று அறிவித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், ஊர்வசி, சித்ரா லட்சுமணன், இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் கே.விஸ்வநாத் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஷம்தத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதையை கமல்ஹாசனே எழுதியிருக்கிறார். பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். பின்பு அமெரிக்காவில்தான் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் நடத்த வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்பியதால் படம் தள்ளிப் போடப்பட்டது.

மேலும், ‘லிங்கா’, ‘ஐ’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு வரிசையாக வந்ததினால் மீண்டும், மீண்டும் ஒத்திப் போடப்பட்ட இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்று ரிலீஸாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

‘விஸ்வரூ’பத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் கமல்ஹாசனின் படம் என்பதால் அனைவருமே இந்தப் படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Back To Top
CLOSE
CLOSE