ஸ்கை மூவீஸ் என்ற படநிறுவனம் சார்பில் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்நாடு. எஸ்.பகதூர்ஷா தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “மேல்நாட்டு மருமகன்” என்று பெயர் சூட்டி உளார்கள். இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஆண்ட்ரீயன் அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ் ராகவன் நடிக்கிறார். ஒளிப்பதிவு – கெளதம்கிருஷ்ணா இசை – வி.கிஷோர் குமார் பாடல்கள் – நா.முத்துக்குமார், நாஞ்சில் நாதன், ஆக்காட்டி ஆறுமுகம், எம்.எஸ்.எஸ். எடிட்டிங் – ராஜ்கீர்த்தி தயாரிப்பு மேற்பார்வை – ஆனந்த் தயாரிப்பு – தமிழ்நாடு. […]
ரஜனீஷ் இயக்கத்தில் காமெடி படம் கருணாஸ் நடிக்கும் “ லொடுக்கு பாண்டி “
வி விக்டரி கிரியேசன்ஸ் – ஜி பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ லொடுக்கு பாண்டி” கருணாஸ் அறிமுகமான நந்தா படத்தில் அவரது கேரக்டரான லொடுக்கு பாண்டி என்ற காதாப்பாத்திரப் பெயரையே இந்த படத்திற்கு சூட்டி காமெடி படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குனர். கருணாஸ் ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். மற்றும் இளவரசு, மனோபாலா, சென்ட்ராயன், ரிஷா, ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – ஜெய்ஆனந்த் / இசை – எம்.எஸ்.தியாகராஜன் கலை – […]
நடிகை விந்தியா மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகையும் அதிமுகவின் தேர்தல் பிரச்சார பேச்சாளருமான விந்தியா இன்று கே கே நகரில் உள்ள கே எம் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அவரது கணையம் பாதிக்கப்பட்டுள்ளது சில நாட்களுக்கு முன்பு விந்தியா வாரணாசி சென்றிருந்தார்.அங்கிருந்து திரும்பிய நாள் முதலே அவருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது.கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அனால் நேற்று மாலை உடல் நிலை மோசமானதால் மயங்கி விழுந்தார் உடனடியாக விந்தியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மருத்துவர்கள் அடுத்த மூன்று […]
“மகாபாரதம்” 100 வது தொடர்
“மகாபாரதம்” 100th Episode ‘Press Release’ மகாபாரதம் உலகில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை, வியாசர் எழுதிய இந்த சுயசரிதை ஒரு இந்திய இதிகாசம், எப்படி வாழவேண்டும் என்பது ராமாயணம், எப்படி வாழக்கூடாது என்பது மகபாரதம். தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஓரு இதிகாசத் தொடர் முதன் முறையாக சன் தொலைக்காட்சியில் 100 எபிசோடுகளை கடந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை தயாரிக்கும் சினிவிஸ்டாஸ் நிறுவனம் இதில் பெருமிதம் கொள்கிறது. முற்றிலும் தமிழிலேயே தமிழ் நடிகர்கள், தமிழ் […]
பிரபல நடிகர் V.S. ராகவன் காலமானார்
பழம்பெரும் நடிகர் திரு. V.S. ராகவன் இன்று மாலை 5.50 மணியளவில் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. சில நாட்களுக்கு முன் மஞ்சள்காமாலை நோய்வாய்பட்டு திநகரில் உள்ள டிவெல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஸ்ரீனிவாசன் மற்றும் கிருஷ்ணா என இரு மகன்கள் உள்ளனர். இவரது இறுதி சடங்கு நாளை நடக்கவுள்ளது. விட்டு முகவரி: 6, ஸ்கூல் வியு […]
ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “சாலையோரம்”
ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்பராயன் மற்றும் டாக்டர்.செல்வ. தியாகராஜன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “சாலையோரம்” பி. வாசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.மூர்த்திகண்ணன் இப்படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார். இந்தியாவிலேயே இதுவரை வெளிவந்திராத புதிய கதைக்களத்தை இப்படத்தில் கையாண்டிருக்கிறார். அருகிலிருக்கும் மனிதர்களின் அறியப்படாத உணர்வுகளை சுவாரஸ்யமாக திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். ராஜ், செரீனா அறிமுகமாக பாண்டியராஜன், சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன், ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சிங்கப்பூரைச்சேர்ந்த சேது […]
“ வஜ்ரம் “ பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது
S.D.ரமேஷ்செல்வன் இயக்கத்தில் “ வஜ்ரம் “ பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாககிறது இந்த படத்தை ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரிக்கிறார். இந்த படத்தில் பசங்க, கோலிசோடா வெற்றிப்படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா,ஜெய், பாண்டிரவி, பெல்பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி,சமிரா,அம்சாதேவி, நாகு […]
1000 படங்களுக்கு இசை அமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்
1000 படங்களுக்கு இசை அமைத்து உலக சாதனை படைத்த இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார்! உலக சினிமா சரித்திரத்திலேயே இல்லாத வகையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த பாராட்டு விழாவில் பாலிவுட் சாதனையாளர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத் […]
வெள்ளக்காரதுரை வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில்
“வெள்ளக்காரதுரை” வெற்றியை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்கம் எழில் கடந்த கிறிஸ்துமஸ் அன்று வெளியான நான் இயக்கிய வெள்ளக்காரதுரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களிடையே காமெடி படங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் வெள்ளக்காரதுரை படம் வெற்றிப்பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் காமெடி படம் இயக்க இருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருகிறது. விரைவில் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார் இயக்குனர் எழில்.
ஜல்லிக்கட்டு தடைகளை உடையுங்கள் – கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு தடைகளை உடையுங்கள் மத்திய மாநில அரசுகளுக்குக் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் உயரத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். ஒவ்வோர் இனத்திற்கும் நில அடையாளம் மொழி அடையாளம் கலை அடையாளம் கலாசார அடையாளம் உண்டு. தமிழ் இனத்தின் […]